Joint Statement against GM Mustard in Chennai

விவசாயதலைவர்கள்மற்றும்சமூகஆர்வலர்கள்தமிழகஅரசைமரபணுகடுகுக்குஎதிராகமத்தியஅரசுக்குகடிதம்எழுதும்படிவற்புறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாய தலைவர்கள், தமிழக வணிகர் சங்கம், பாதுகாப்பான உணவு மற்றும் சமூக ஆர்வரலர்கள் கலந்து கொண்டு மரபணு பயிர்கள் பற்றியும், குறிப்பாக மரபணு கடுகு பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.  மரபணு பயிர்களின் கேடுகள் தெரிந்தும் இப்பொழுது மரபணு கடுகினை கொண்டுவர தயாராகும் மத்திய அரசுக்கு மரபணு பயிர்களை அனுமதிக்க வேண்டாமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டனர்.

இந்த அதிமுக அரசு, தங்கள‌து தேர்தல் அறிக்கையில் மரபணு பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளித்த‌தை நினைவூட்டியும், நமது மாநில அரசு விவசாயத்தில்   தமது உரிமைகளை நிலை நாட்டவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

கடுகு இங்கு பெரிதும் பயிரிடப்படாத பயிராக இருப்பினும், எல்லா வகை உணவிலும் உபயோகிக்கப்படுகிறது.  அதனால் மரபணு கடுகிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். மேலும் மரபணு கடுகு மகசூலை அதிகரிக்க கொண்டு வருவதாக கூறுவது மிகவும் தவறு. அதுவும் ஒற்றை நாத்து நடவு போன்ற பல (பாரம்பரிய) முறைகள் உள்ளன, மகசூலை பெருக்க. மரபீனி போன்ற பின் விளைவுகள் நிறைந்த தொழில்நுட்பம் தேவை இல்லை.
மேலும் இந்த சமூக ஆர்வலர்கள், இதனை கொண்டுவரும் தில்லி பல்கலைகழகம், இந்த மரபணு கடுகு, களைகொல்லி தாங்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்ளது என்பதை மறைத்து அனுமதி கோருகிறது என்றனர் . களைக்கொல்லி தாங்கும் தொழில்நுட்பத்தினால் பல கேடுகள் உண்டு என்று உலகளவிலும் அதற்கு பெரும் எதிர்ப்பு உண்டு. மேலும் நமது நாட்டில் பல பாதிப்புகள் அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வாதாரம் மற்றும் உடலுக்கும் கேடு விளைவிக்கும்;  நுகர்வோருக்கு நேரடியான ஆரோக்கிய கேடுகள் இந்த உணவின் மூலம் நேரும்;  மேலும் இந்த தொழில்நுட்பம், பல ஏழை விவசாய கூலிகளை அவர்களது வாழ்வாதாரத்தினின்று அகற்றும். உச்ச நீது மன்றத்தில் இப்பொழுது நிலுவையிலிருக்கும் போது இதனை இப்பொழுது ஏன் இவ்வளவு அவசரமாக கொண்டுவர முயல வேண்டும்?

இதில் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்- இந்த மரபணு கடுகு பற்றி மட்டும் அல்ல இது, இதனை தொடர்ந்து ஒரு பெரும் பட்டாளமே வரும். அப்படி மரபணு மடை திறக்கப்பட்டால், உழவர் வாழ்வாதாரத்திற்கும், பயிர்/உயிரி பன்மயத்திற்கும் ஒரு பெரிய பிரச்சினையை உண்டாக்கும்.

பி டி பருத்தியை உற்று நோக்க வேண்டும் நாம் இப்பொழுது. பஞ்சாப், ஹரியாணா, குஜராத். மஹாராஷ்டிரம் – எல்லா மாநிலங்களிலும் பெரும் துயரம் நிகழ்ந்தது. பி டி பயிர்கள் பெரிதும் தோற்க, காய் புழுக்களின் அட்டகாசம் பெரிதாக, மகசூல் இழப்பு மட்டுமில்லாது, இடுபொருள் செலவும் கூடி விவசாயிகளை பெரும் கடனிலும் தொல்லையிலும் ஆழ்த்தியது. அதனால் மேற்கூறிய எல்லா மாநில அரசுகளும் தமது விவசாயிகளை பாரம்பரிய/நாட்டு பருத்தி விதைகளை உபயோகிக்கும் படி அறிவுறுத்தினர் இந்த ஆண்டு! ஆனால் நமது விதை பன்மையம் மொன்சான்டோ போன்ற பன்னாட்டு கம்பனிக்களின் விதை ஆதிக்க வியாபாரத்தால், அழிந்தது. இதைத்தான் சுற்றுச்சூழல் தன்னார்வலர்களும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இப்பொழுது பல மாநிலங்களில் அது நடந்து பெரும் பிரச்சினைக்கு ஆளாகி உள்ளனர் விவசாயிகள். இந்த துயரம் வேறு எங்கும், வேறு எந்த பயிரிலும் நடந்து விடக்கூடாது என்று இன்று கூடியிருந்த எல்லா விவசாயத்தலைவர்களும் எச்சரித்தனர்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நமது தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதா அவர்கள் உடனடியாக, இப்பொழுது  வரவிருக்கும் கடுகு பருவத்திற்குள், தலையிட்டு மத்திய அரசு ம‌ற்றும் இந்த மரபணு ஒப்புறுதி ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இந்த மரபணு கடுகு சந்தைக்கு வருவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Endorsed by:

Sl Name Organisation
Vellaiyan President, Tamil Nadu Traders’ Association
Vettavalam Manikandan President, Tamizhaga Vyavasayigal Sangam
“Cauvery” Dhanapal President, Cauvery Delta Farmers’ Association
Dr V Suresh State Advisor in Supreme Court PIL on Right to Food
Dr Sultan Ismail EcoScience Research Foundation
Ananthoo Safe Food Alliance
Arachalur Selvam Tamil Nadu Organic Farmers’ Federation
Dr G Sivaraman Siddha Expert and Writer
Adv Sundararajan Poovulagu Nanbargal
Adv Sivakumar National Alliance For People’s Movements
AP Raveendran President, Cuddalore Maavatta Uzhavar Mandram
Suresh Kanna South Against Genetic Engineering (SAGE)
Jagan(nathan) Nallakeerai
Rama Subramanyam Samanvaya
Kumar Vanagam
Dr Jeevanandam Tamil Nadu Green Movement
Ponnaiyan Tharcharbu Vyavasayigal Sangam
Pamayan Talanmai Uzhavar Iyakkam
Piyush Manush Salem Citizens’ Forum
Vaiyapuri Aikya Vyavasayigal Sangam
Kishore Kumar Actor
Rohini Actress
Nityanand Jayaraman Vetiver Collective
Himakiran Anugula SKCRF
Parthasarathy VM OFM/Safe Food Alliance
Sheelu Francis Tamil Nadu Women’s Collective
Fathima Burnad Tamil Nadu Women’s Forum
S Selvam Senior Reporter
Esakki Natarajan Vanagam
Sharath Chander The Weekend Agriculturist
Rajamurugan Nallasoru
Selva Ganapathy Social Worker and CNN-IBN “Indian of the Year” awardee
Nel Jayaraman CREATE
Oswald Quintal Kudumbam
Jagadeesan Rice Mill Owners’ Federation, Erode
Periya Nammazhvar Foundation
Kavitha Kuruganti Coalition for a GM-Free India
Mohan CIRHEP
Ponnuthai Kalanjium Women Farmers’ Association
Balaji Shankar Tharcharbu Iyakkam, Sirkali
Radhika Rammohan Restore organic  Consumer coop
Gopi Deva Organic Farmers Market, Chennai
Srinath Suresh Tula, Chennai
Rajeshkumar Millet Store, Chennai
Arul Doss NAPM, Chennai
Selavaganapathy Aid India, Chennai
Alladi Mahadevan Organic Terrace Garden group, Chennai
Aparna Nagesh Consumer Forum, Chennai
Dr Suchitra Ramkumat CAG, Chennai
Saravanan Karunanithi PUCL, Chennai

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top